தமிழ் மொழியை குழந்தைகளுக்கு கற்றுத் தருவது எப்படி?
செம்மொழியாம் நம் தமிழ் மொழி உலகிலேயே மிகப் பழமையான மொழி. நம் மொழி என்றென்றும் வாழவதற்கு முதலில் பெற்றோர்கள் தமிழ் மொழியின் சிறப்புகளை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். பரவலாக பல நாடுகளில் ஆங்கிலம் பேசப்படுவதால் நாம் வர்களுடன் தொடர்பு மற்றும் நட்பு வைத்துக் கொள்ள ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதனால் தாய்மொழிகளில் பின்தங்கி விடுகிறோம். முதலில் பெற்றோர்கள் குழந்தைகளை தாய்மொழியில் பேச ஊக்குவிக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளிடம் தமிழில் பேசுவது மிக அவசியம். முக்கியமாக வீடுகளில் அவர்கள் தமிழில் பேச வேண்டும். சிறு வயது முதலே தமிழில் கேட்டு தமிழில் பதில் சொல்லி வளரும் பிள்ளைகள் தமிழை நன்றாகவே பேசுகிறார்கள். குழந்தைகள் தமிழ் மொழியைக் கற்க பெற்றோர்களும், ஆசிரியர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். பல வழிகளில் குழந்தைகளுக்கு தமிழைக் கற்றுக் கொடுக்கலாம். 1 வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எளிதில் சொல்லக் கூடிய அம்மா, அப்பா, உறவுமுறை, வணக்கம், டாடா போன்ற சொற்களை சொல்லிக் கொடுக்கலாம். சிறு வயதில் குழ...

Comments
Post a Comment